நீங்கள் அறிய மாட்டீர்கள்!
அவள் காரணக்காரி என்று!
சிந்தை சிதறுமென்றே
என் முன் வருவதில்லை!
மனநிலை மாறுமென்றே
என் முன் சிரிப்பதில்லை!
தவித்திடக் கூடாதென்றே
என்னை தவிர்த்து வந்தாள்!
வலிகளே வேண்டாமென்று தான்
வசனங்கள் பேசாதிருந்தாள்!
காத்திருப்பை கருத்தில் கொண்டே
காதலையும் மறைத்திருந்தாள்.!
என்னவள்.!
எல்லாமுமானவள்..!