Friday, April 28, 2023

சானிட்டரி நாப்கின் - வரலாறு

 


சானிட்டரி நாப்கின்களின் வரலாறு:

துணியில் இருந்து தான் சானிட்டரி நாப்கின் வரலாறு ஆரம்பித்து இருக்கும் என்று பெரும்பாலானோர் நினைக்கலாம். ஆனால் துணிகள் கண்டுபிடிக்கும் முன்பு இருந்து பெண்களுக்கு மாதவிடாய் இருக்கிறது அப்போது பெண்கள் என்ன பயன்படுத்தி இருப்பார்கள்?

துணிகளுக்கு முன்னால் பெண்கள் விலங்குகளின் தோல், ஆடுகளின் கம்பளி, புற்கள், சாணி வறட்டி, மண், எகிப்தில் papyrus, கிரேக்கத்தில் மரப்பட்டை இன்னும் advanced ஆ ஒரு மரத்துண்டில் துணியை சுற்றி tampon போலவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவை ரத்தத்தை உறியாது அசௌகரியமானது.

பின்னர் துணிகள் கண்டுபிடிக்கப்பட்டபின் உபயோகப்படுத்திய பழைய துணியை (கந்தலாகி கிழிவதற்கு முந்தைய stage) பயன்படுத்தினார்கள். துணி அரிதானது, அணிவதற்கே கிடைக்க கஷ்டமான காலத்தில் அன்றைய boomer கள், ஆரம்ப காலத்தில் புற்கள் தானே வைத்திருந்தார்கள் இப்போது என்ன உங்களுக்கு துணி கேட்குது?

அணிவதற்கே ஆடை இல்லாதபோது அதற்கு துணி வேண்டும் என்று கேட்க உங்களுக்கு குற்ற உணர்ச்சியாக இல்லையா என்று கேட்டு இருக்க கூடும். அல்லது மண், சாணி போன்றவை இயற்கையில் கிடைக்கும் அருமருந்து துணி செயற்கையானது அதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மலட்டுத்தன்மை வந்துவிடும் என சொல்லி இருக்கலாம்.

துணி உபயோகம் வந்தபின்னும், அது பெரிய relief ஆ இல்லை. பல layer களில் துணியை மடித்து பயன்படுத்த வேண்டும், துணியும் ரத்தத்தை எளிதில் உறிந்து விடாது, எப்போதும் ஈரத்துடனே இருக்கும் அதனால் கிருமி தொற்று ஏற்படும். leakage ஆக அதிக வாய்ப்புகள்.

அதை துவைத்து யாரும் பார்க்காமல் மறைவிடத்தில் காய வைக்க வேண்டும், நாளடைவில் கறையேறி நாற்றமடிக்க ஆரம்பித்து விடும், இப்படி அதிலும் பல பிரச்சனைகள்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், குழந்தை பெற்ற பின் வரும் உதிரப்போக்கை சமாளிக்க nurse ஒருவர் பஞ்சை gauzeல் சுற்றி பெண்களுக்கு பயன்படுத்தினார் இதுதான்  சானிட்டரி நாப்கின் வரலாற்றின் தொடக்கப்புள்ளி. Johnson & Johnson, Lister’s Towels என்ற பெயரில் (அறுவை சிகிச்சையின் போது antiseptic technique களை பரவலாக்கிய Joseph Lister என்னும் அறுவை சிகிச்சை நிபுணரை கவுரவிக்கும் வகையில்) முதல் disposable sanitary pad ஆக விற்பனை செய்ய ஆரம்பித்தது.

அன்றைய தேதியில் இவை விலை அதிகம் எல்லாராலும் பயன்படுத்த முடியாது. இதுவும் அசௌகரியமானது தான் மிகவும் பெரிதாக, பெல்ட் போட்டு கட்டி பயன்படுத்துவது சிரமமானதாக தான் இருந்தது, கடையில் சென்று கேட்க பெண்கள் சங்கடப்பட்டார்கள்.


Hygienic Towelettes என்னும் கம்பெனி என்ன செய்தது வீடு வீடாக சென்று பெண்களிடையே விற்பனை செய்தது. ஆனாலும் பெண்கள் இதனை வாங்க மறுத்தார்கள். 


மாதவிடாய் என்றாலே அசிங்கம் அதை பற்றி பேசுவதோ சானிடரி நாப்கின் வாங்குவதோ பெரிய தவறு என்பதாக சமூகத்தில் இருந்த எண்ணமே காரணம்.

1920 ல்,  Kimberly-Clark Corporation என்னும்  bandage உற்பத்தி செய்யும் கம்பெனி, மரத்தூள் பஞ்சு இவைகளை கொண்டு adhesive strip உடன் சானிடரி நாப்கின்களை தயாரித்து Kotex என்ற பெயரில் வெளியிட்டது. இது  Lister’s Towels விட மெல்லிதானது மற்றும் பெல்ட் போட்டு கட்டும் சிரமம் எல்லாம் இல்லை.

World War II வந்ததும் பஞ்சுக்கு ஒரே தட்டுப்பாடு. Earl Dickson என்பவர் தாவரங்களின் cellulose fiber ஐ எடுத்து அதை  process செய்து cellucotton என்ற ஒன்றை தயாரித்தார். இது பஞ்சை காட்டிலும் அதிக உறிஞ்சும் தன்மை கொண்டது.

Kotex இதனை சானிடரி நாப்கின்களில் பஞ்சுக்கு பதிலாக வைத்து விற்பனை செய்தது இந்த முறையில் நாப்கின் இன்னும் மெல்லிதானது.

தற்போது  sodium acrylate gel, பயன்படுத்தப்படுகிறது. இவை cellucotton விட அதிக அளவு உறிஞ்சும். மேலும் நாப்கின் எப்போதும் dry யாக இருக்கும்.

மிக மிக முக்கியமாக விலை மிக குறைவு.

மாதவிடாய் பற்றிய taboo இன்று முன்பு போல இல்லை கடைகளில் சென்று நாப்கின்களை எளிதாக வாங்கி வர முடிகிறது. நாப்கின்கள் முக்காவாசி எல்லா இடங்களிலும் கிடைக்கிறது ஆனாலும் பெண்கள் அதை வாங்க தயக்கம் காட்ட ஒரே காரணம் விலை.

biodegradable, organic, போன்ற  disposable pad களும் இருக்கின்றன. ஆனால் அவை விலை அதிகம். sodium acrylate gel பயன்படுத்த பாதுகாப்பானது, விலை குறைவு, சௌகரியமானது ஆனால்  biodegradable அல்ல.

பெண்களையே குறை சொல்லாமல், மனசாட்சி இருக்கா என்று கேட்காமல், மீண்டும் துணியை பயன்படுத்து என்று அதில் உள்ள சிக்கல்கள் புரியாமல் பேசாமல், அரசு sanitary pad களுக்கு GST யை குறைப்பது, எல்லா இடங்களிலும் biodegradable, organic disposable pad கள் மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்வது.

mass production க்கு வழிவகை செய்வது, பெண்களிடம் disposable pad களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றை செய்வதின் மூலம் பெண்கள் மற்றும் இயற்கை இரண்டையும் பாதுகாக்கலாம்.

Women use menstrual products to manage their periods & should not be held responsible for the environmental impact of these products. the responsibility for reducing the environmental impact of menstrual products lies with manufacturers, policymakers, and society as a whole.