Saturday, February 27, 2021

நிச்சயம் நிச்சயம்


நாள் குறிக்கப்பட்ட பின்...



நிச்சயிக்கப்பட்ட நாளில் நிச்சயம் கயிறுகளில் முடிச்சுகள் விழலாம்!


சர்வ நிச்சயமாய் நீ நிந்தித்தது உண்மையானால் ...!

மூன்றாம் முடிச்சின் இறுக்கத்தில் மூச்சடங்கி மூர்ச்சையற்றிடும் அவளின் அன்பு..!


கதைபல பேசி வறண்டுபோன தொண்டைகள்..! முறிந்ததை! 

வறட்சி காலத்திலும் ஈரம்கண்ட உதடுகள்..! வெடித்ததை! 

காமமும் காதலும் கலந்து பிசைந்து ஊட்டி உறவாடிய உருண்டை விழிகள்..! வெளிறி வெளியேறியதை! 

உதட்டு முத்தத்துக்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்ட முன்நெற்றி முற்றம்..! சிவந்துச் சிதறியதை! 

சிந்தை சிதறடிக்கும் சிரிப்பின் கொள்கலனான கிண்ணக் கன்னம்..! இழித்துக் கிழிந்ததை! 

இவையாவும் நிச்சயம் நீ காண வேண்டும்..! நிச்சயமானால்..!


இணையோடு வலம்வந்த அந்தத் தீயின் தகிப்பில்..!

இறுக்கி முறுக்கி நீயிட்ட

முடிச்சுகளில்..!

மூதேவிகள் எழுந்து உன் முக்காடாய் முகங்கொள்ளும்!

பரிகாரமில்லா சாபங்களுக்கு நீ 

சம பந்தி ஆக்கப்படுவாய்!


நிச்சயம் நாளை நிச்சயமானால்

நிச்சயம் நானும் நின்னை 

நிர்மூலம் ஆக்கிடுவேன்!

நிச்சயமாய் சொல்கிறேன்!

நிச்சயம் உன்னைக் கொல்லும்..!

அர்த்தமற்ற நிச்சயத்தை நிறுத்து!

நிச்சயமாய் உன்னைத் திருத்து..!


No comments: