Thursday, August 26, 2021

போர்வையும் பேகனும்


போர்வையும் பேகனும்...


அடர்வனத்துக் குளிரின்

அருமையை அனுபவித்து...

ஈர இறகை மென்காற்றில் 

உலர்த்திச் சிலிர்க்க

எத்தனித்தபோது.!


பட்டப்பெயர் பேகன்களின்

வள்ளன்மைப் பசிக்காய் வீசப்பட்ட...

போர்வைக் கட்டுக்குள் முடங்கி...

புழுக்கத்தில் அழுந்தும்

தோகையர் கோடி.!


அக்கினிக் குஞ்சொன்றை 

அப்போர்வைக்குள் வைப்போம்.!

வெந்து தணியட்டும் காடு.! - புகழ்

பேகன்களின் வள்ளன்மையோடு.!

- சி.விஜய்

No comments: