எனது 'ங்ஙா.!' கவிதைத் தொகுப்பிலிருந்து...
இரவு அகராதி
கீழ்வான் செவ்வெனக் கக்கி,
அசைவு யாவுக்கும்
அடையென நிறுத்தற்குறியிட்டு!
குற்றக் குன்றத்திலும்,
மறை என்றேற்றுக்
கற்ற அல்லது கற்பிக்கப்பட்ட
நம்பிக்கை மேடுகளின் மறைவுகளிலும்,
மருந்தை நிறைத்துத்
திரியை எடுத்துக்கொண்டு,
சத்தமின்றி! கத்திக்கொண்டே ,
ஆர்பாட்டமாய் ஓடுகிற
ஆதவ ஆகமத்தின்
மொழிபெயர்ப்பாரற்ற பிரளய
வெடிப்புக்குப் பின்னான சிதறல்களுக்கு,
அன்றைய அனுபவத்தின் ஊடே
அகராதிப்புட்டியை புதுமதுவூற்றி
போதைச்சொற்களை குளிரில் தோய்த்து...
தன்னில் நிறைத்துக் கொண்டிருக்கிறது.!
இம்மோன இராப்பொழுது..!

No comments:
Post a Comment