Wednesday, March 2, 2022

Vacuum bomb

 

ரஷ்யா உக்ரைன் நாட்டுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. ரஷ்யாவிற்கு ஆதரவாக பெலாரஸ் நாடு களத்தில் இணைந்து போர் செய்து வருகிறது. இது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுமோ என்று பலரும் அஞ்சுகின்றனர். அதைவிட அங்கு போரில் பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்கள் தான் நம்மை இன்னும் பயத்தில் ஆழ்த்துகிறது. உக்ரைன் அரசு ரஷ்யா தங்கள் மீது Vacuum Bomb கொண்டு தாக்குதல் நடத்துகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறது. ஆனால் இதுகுறித்த எந்த உறுதியான தகவல்களும் இல்லை. Vacuum Bomb என்றால் என்ன? அது ஏன் அதன் விளைவுகள் என்ன என்று தெரிந்துகொள்வோம்.

Vacuum Bomb அல்லது Thermobaric munition முதலாக இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் ஜெர்மன் படைகளால் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு அமெரிக்கா வியட்நாமில் பயன்படுத்தியது. இந்த Vacuum Bomb என்பது ‘Bomb Missile போலவோ அல்லது போர்விமானங்களில் இருந்து இலக்கில் வீச முடியும். இந்த Bomb ஒரு கட்டிடத்தின் முகப்பிலோ அல்லது குகைகள் போன்ற பகுதிகளில் வீசப்பட்டால் இதன் மூலம் தற்காப்புக்காக வைத்திருக்கும் எல்லா தடுப்புகளையும் உடைத்து உள்ளே இருக்கும் பொருட்கள் மனிதர்கள் எல்லோர் மீதும் கடுமையான சேதங்களை ஏற்படுத்தும். அதோடு மட்டுமில்லாமல் அங்கு சுற்றியிருக்கும் பகுதியில் உள்ள Oxygen முழுவதையும் இது உள்ள இழுத்துக்கொள்ளும் இதனால் பலத்த உயிர்சேதங்கள் ஏற்படும்.

இதை பயன்படுத்தக்கூடாது என்று எந்தவிதமான போர் சட்டமும் இல்லை. ஆனால் இதை பொதுமக்கள் இருக்கும் பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தினால் இது போர் குற்றமாகும். இதை ஏன் பயன்படுத்த கூடாது என்று கூறுகின்றார்கள் என்றால் இது மற்ற ஆயுதங்களை போல் இல்லாமல் இதன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் கடுமையான சேதங்கள் ஏற்படும்.

சான்று: Mr.Bhai007

No comments: