Sunday, July 23, 2023

கொடும்பசியும் கொலைக்களமும்


கொடும்பசியும் கொலைக்களமும்

அந்த முட்புதரின் நடுவில்

உச்சாணிக் கொம்பில்

தென்றலுக்கே உதிர்ந்துவிடும்படி

தொங்குகிறது முதிர் மாங்கனி.

எச்சிலை முழுங்கி, காற்றினைக் குடித்து

ஊழிப்பசியுடன் எத்தனிக்கும் முடவனுக்கு

மறைக்கின்றன தொரட்டிக்காரர்களின்

தொங்குசதைகளும் தொப்பைகளும்..!


- கவிஞர்.விஜய்

No comments: