என்னைப்போல..!
தளிர்தாலும் கிளைத்துப் பூத்தாலும்
வெட்டப்படுவோமென்று தெரிந்தால்!
நீரூற்றி உரமிடுவது
வேலிக்காகவே என்பதை அறிந்தால்!
தான் ஒரு அழகு போகப்பொருளென
உணர்ந்தால்!
தனது பலவர்ணமும், உடலமைப்பும்
இயற்கையல்ல செயற்கை
எனப் புரிந்தால்!!!
இந்த குரோட்டன்ஸ் செடிகள் தற்கொலை செய்துகொள்ளுமா?
இல்லையேல்,
கொலையே நிகழ்ந்துவிட்ட பின்பு
தற்கொலை எதற்கென நகைக்குமா?
என்னைப்போல..!

1 comment:
Ithu puriyavillai 😑 meendum muyarchi seiyavum
Post a Comment